சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் வர்மாவ் விரைவில் வெளியாகவிருந்த நிலையில் அதன் இயக்குனர் பாலா,
வர்மா படத்திலிருந்து தாமாகவே விலகிக் கொண்டதாக பாலா அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விபரம் வருமாறு..
பத்திரிக்கையாளர்கள், படைப்பாளிகள் கவனத்திற்கு:
வர்மா படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறேன்.
படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.
கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு…
துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை. என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.