விஜய்சேதுபதி, திரிஷாவின் “காதலே காதலே” – Video

விஜய்சேதுபதி, திரிஷா நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம்  ’96’. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “காதலே காதலே” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது.

’96’ படத்தை இயக்கி வருபவர்`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார். முற்றிலும் காதலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய்சேதுபதி  16, 36, 96 வயதுடைய  மூன்று விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார்.

’96’ படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில்  “காதலே காதலே”  பாடலின் லிரிக்கல் வீடியோவும் நல்ல வரவேற்பினை பெற்றுவருவதால்  படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.