‘விஜய் டிவி’ நடிகை விபத்தில் காயம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருபவர் நடிகை கம்பம் மீனா. இவர், தனது சொந்த ஊருக்கு செல்லும் வழியில், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.  இதில் அவரது கையில் முறிவு ஏற்பட்டது. ‘ செல்வி ‘ என்ற பெயரிலான இவரது கதாபாத்திரம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். காயமடைந்த அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.