வெள்ளத்தில் சிக்கியவர்களை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் திருமேனி!

கோவை மாவட்டம் வால்பாறை¸பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் முதல் தளம் வரை வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில் வால்பாறை காவல் ஆய்வாளர் திரு. திருமேனி அவர்களுக்கு இது குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்த ஆய்வாளர் அவர்கள் தனி ஆளாக இருந்து வெள்ளத்தில் சிக்கி தவித்த 10க்கும் மேற்பட்ட நபர்களை தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் நீந்திச் சென்று காப்பாற்றினார். வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய காவல் ஆய்வாளர் அவர்களுக்கு பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்