இந்திய உலக குறும்பட விழா(இந்திய குளோபல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்) வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் 80 குறும்படங்கள், சென்னையில் பல்வேறு இடங்களில் திரையிடப்பட உள்ளன. திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொள்ளும் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட்ட உள்ளன. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் குறும்படங்களின் திரையிடலும், விருது வழங்கும் விழாவும் வரும் அக்-14 ம் தேதி சென்னை ‘பிரசாத் லேப்’பில் நடைபெற உள்ளது.
குறும்படங்கள் அனுப்பிவைப்பதற்கான கடைசி தேதி ஜூலை-30ல் இருந்து அக்-5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறும்படங்களை மெருகேற்றும் விதமாகவும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் கருத்தரங்கம் மற்றும் சிறப்பு பயிற்சி அமர்வுகள் நடத்தப்படவுள்ளன. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் போட்டியிடும் இந்திய மற்றும் சர்வதேச படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கும் விதமாக இந்தியாவில் நடத்தப்படும் குறும்பட விழாக்களுக்கான முக்கியமான படியாக இந்த விழா இருக்கும்.
தனித்து படம் எடுக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த கதைகளை பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளோம். நீங்கள் சின்ன பட்ஜெட்டிலோ அல்லது பிரமாண்டமான பட்ஜெட்டிலோ படம் எடுத்தாலும் உண்மையிலேயே பார்வையாளர்களை கவர்ந்திழுப்பது எது என்பதை சொல்லும் விதமாக அந்த கதைகள் இருக்கும்.
பல்வேறு சமூகத்தினரின் ஒருமித்த ஆதரவுடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பொழுதுபோக்கு, தூண்டுதல் மற்றும் கலாசசாரம் ஆகியவற்றை, உலகை சுற்றியுள்ள இந்த கதைகளை காட்டுவதன் மூலம் அந்த சமூகத்தினரிடம் கொண்டு சேர்க்கலாம்..
இந்த குறும்பட விழாவை விகோஸ் மீடியா (Vgosh Media) ஒருங்கிணைக்க, அதனுடன் பல்வேறு கல்வி நிறுவனங்கள், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் ( கில்டு), பிக் எப்.எம் (BIG FM), பிலிம்ப்ரீவே(FilmFreeWay), கே எஸ்.கே மீடியா(KSK Media) மற்றும் பலர் இதற்கு தங்கள் ஆதரவை அளிக்க இருக்கின்றனர்.
விருதுக்கான பிரிவுகள் (சர்வதேச அளவில் ) ; சிறந்த குறும் கற்பனை படம், சிறந்த குறும் ஆவணப்படம், சிறந்த குறும் அனிமேஷன் படம் , சிறந்த குறும் சோதனை முயற்சி படம், சிறந்த குறும்படம் (நகைச்சுவை /நாடகம் / திகில்), சிறந்த இந்திய குறும்படம் – சிறப்பு விருதுகள் ; சிறந்த குழந்தைகளுக்கான குறும்படம்
விருதுகளுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகும் படங்களுக்கு விழாவுக்கு முன்பும், விழாவின்போதும், விழாவிற்கு பிறகும் கூட அவர்களின் உழைப்பை, திறமையை ஊக்குவிக்கும் விதமாக இந்த திரைப்பட விழா உணர்ச்சிப்பூர்வமாக அமையவுள்ளது
சமூக வலைதளங்களில் இந்த திரைப்பட விழா குறித்த செய்திகளை தொடர்ந்து பகிர்வதன் மூலம் அதில் உள்ள எண்ணற்ற நபர்களுக்கு இந்த விழா குறித்து தெரியவரும். மேலும் இந்த குறும்பட விழாவிற்கு பிறகும் கூட அது உலகளவில் அதிக எண்ணைக்கையிலான பார்வையாளர்களை ஒன்றுதிரட்ட உதவும்.
மேலதிக விபரங்களுக்கு www.igsff.com என்கிற இணையதளத்தை பார்க்கவும்.
மேலும் உங்களது படங்களை Filmfreeway மூலமாக ( https://filmfreeway.com/IndiaGlobalShortFilmFestival ) வும் சமர்ப்பிக்க முடியும்..