அரவிந்த் சாமி – ரெஜினா நடிக்கும் ” கள்ள பார்ட் ” ஏப்ரல் வெளியீடு
மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும்அரவிந்த் சாமி – ரெஜினா நடிக்கும் ‘கள்ள பார்ட்’ படம் “கள்ளபார்ட்” அரந்த்சாமி கதா நாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக ரெஜினா நடிக்கிறார். மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள். வித்தியாசமான கதைக் களம் கொண்ட கள்ள பார்ட் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது..
படத்தை பற்றி இயக்குனர் ராஜபாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தோம்…
அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த காரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள் வாங்கி பிரதிபலிப்பார். அது ஸ்கிரீனில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தி விடும். கள்ள பார்ட் அவருக்கு சிகரமாய் இருக்கும். ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார்.படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர்.