இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-பின்னணி பாடகி சைந்தவி, விவாகரத்து!

பிரபல இசையமைப்பாளர், நடிகர்  ஜி.வி.பிரகாஷ் – பிரபல பின்னணி பாடகி சைந்தவி   இருவரும், கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, ‘அன்வி’ என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், இவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் சுமூகமாக பிரிவதென்று முடிவெடுத்தனர். இது குறித்த தகவலை, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலை பக்கத்தில் இது குறித்த அறிவிப்பினை பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் – பிரபல பின்னணி பாடகி சைந்தவி   இருவரும், கடந்த 2 வருடங்களாகவே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், குடும்பங்களுக்குள் ஏற்பட்ட குழப்பமும், கருத்து வேறுபாடுமே காரணம் என சிலர் கூற, இவர்களின் விவாகரத்து குறித்த, காரணங்கள் பலவாறு பேசப்பட்டு வருகிறது.