விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டக்கோழி. இன்றும் திரைப்பட விரும்பிகளின் மிகவும் பிடித்தமான படம் என்று சொன்னால் இப்படத்தை கண்டிப்பாக சொல்வார்கள். வெளிவந்து பல வருடம் ஆன பின்னரும் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக சண்டக்கோழி உள்ளது.
பிளாக்பஸ்டர் சண்டக்கோழியின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் விஷால் , இயக்குனர் லிங்குசாமி மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்ற வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த வருடம் வெளியாக உள்ள திரைப்படங்களில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இது உள்ளது. சண்டக்கோழி 2 டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று யுவன் இசையில் சண்டக்கோழி 2 முதல் சிங்கிள் வெளியாகவுள்ளது.