‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார். காரணம் என்ன?

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’. இரு எதிர் துருவங்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உள்ளடக்கிய அரசியல் சர்ச்சைப் படம். அ.தி.மு.க வின் விசுவாசி அருந்தவராஜா முதலில் இப்படத்தை இயக்குவதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு நடிகர் வாராகி தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பியது.

‘சிவா மனசுல புஷ்பா படத்தை “கடந்த ஜூலை-16ஆம் தேதி சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டியிருக்கின்றனர். அப்போது . படத்தை பார்த்த அதிகாரிகள்  அரசியல் சம்பந்தப்பட்ட  வசனங்கள், ஆபாசக் காட்சிகள், சில அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளிட்டவற்றை நீக்க சொல்லியிருக்கிறார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்து விவாதம் செய்திருக்கிறார் வாராகி. அதை அப்படியே டெல்லிக்கு அனுப்பி வைத்து விட்டனர் சென்சார் அதிகாரிகள்.

டெல்லியில் உள்ள கமிட்டியிலிருந்து இருந்து  சென்சாரில் நீக்க சொன்ன விஷயங்களுடன் படத்தின் டைட்டிலையும் மாற்ற சொல்லி இன்னொரு உத்தரவும் போடப்பட்டிருக்கிறது. அதாவது மியூட் செய்யப்பட்ட அரசியல் வசனங்களை காரணம் காட்டி  ‘சிவா மனசுல புஷ்பா படத்தை ” தமிழ்நாட்டில் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புக்கொள்ளாமல் அப்பீல் பண்ணியிருப்பதுடன் நீதிமன்றத்துக்கும் செல்லவிருக்கிறார் வாராகி. மேலும் அவர் கூறியதாவது..

‘சிவா மனசுல புஷ்பா படத்தை ” ‘படத்தை பொறுத்தவரை நாங்கள் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. நிகழ்கால சம்பவங்களைத்தான் கற்பனை  கலந்து படமாக்கி இருக்கிறோம் .. அப்படியே இந்தப்படத்தை பார்த்துவிட்டு அதில் உள்ள கதாபாத்திரம்  நாமாகத்தான் இருக்குமோ என யாருக்காவது தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல  ஆனால் சென்சாரோ நாங்கள் யாரையோ குறிப்பிட்டு சொல்கிற மாதிரி நினைக்கிறது.’ என்றார்.

சிவா மனசுல புஷ்பா’ படம் குறித்து ஒருவர் நம்மிடம் பேசும்போது ‘படத்தின் டைட்டில் போலவே காட்சிகளும் வெளிப்படையாகவே இருக்கிறது என்கிறார். மேலும்  தனிப்பட்ட இருவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக்கிவிட்டு கற்பனை என்றால் நியாயமா? என கேள்வி எழுப்புகிறது இன்னொரு தரப்பு.