தமிழ் சினிமாவில் குரு சோம சுந்தரம் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் ஜோக்கர். இந்த படத்தில் ரம்யா பாண்டியன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தை அடுத்து ஜோக்கர் பட ஹீரோ குரு சோமசுந்தரம் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.ஜதின் இயக்கத்தில் காமெடி திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஓடு ராஜா ஓடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்ததுள்ளன. இந்த படகின் ப்ரோமோ பாடல், பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை விஜய் சேதுபதி வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.