ஜோதி திரைப்படத்தில் சில மேஜிக் நடந்துள்ளது – இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்!

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட “ஜோதி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை போரோம் மாலில் நடைப்பெற்றது. ரேடியோ சிட்டி FM தொகுத்து வழங்கிய இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் “RK செல்வமணி”, செயலாளர் “RV உதயகுமார்”, நடிகர் “ரவிமரியா”, இயக்குனர் “நந்தா பெரியசாமி”, இசையமைப்பாளர் “சங்கர் கணேஷ்” ஆகியோர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, அவர்கள் முன்னிலையில்   ஜோதி திரைப்படத்தின்   பாடல்களை வெளியிட்டனர்.

நடிகர், திரைக்கதை ஆசிரியர் “இளங்கோ குமரவேல்” கூறியதாவது.

“ஜோதி எனக்கு ரொம்ப பிடித்தமான படம் ஒன்று. அதுக்கு காரணம் இந்த படத்தோட கதை அந்தமாதிரி.திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து இந்த படத்தை இக்கட்டான கொரோனா காலகட்டத்திலும் சிறப்பாக எடுத்திருக்காங்க. தயாரிப்பாளர் SP ராஜாசேதுபதி மட்டுமில்லாமல் அவர் குடும்பமே இந்த படத்திற்கு வேலை செய்தது  AV கிருஷ்ண பரமாத்மா சிறப்பாக இயக்கியிருக்கிறார். வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா எல்லோரும் நல்லா நடிச்சிருக்காங்க.ஜோதி நிச்சயம் வெற்றியடையும்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் “சங்கர் கணேஷ்” அவர்கள் கூறியதாவது.

“ஜோதி படத்திற்கு சில மேஜிக் நடந்திருக்குனுதான் சொல்லணும். ஆசியாவிலே பெரியது வாகினி ஸ்டூடியோ,அந்த ஸ்டூடியோ உள்ளே நாகிரெட்டி அவர்கள் வீடு இருந்த இடத்தில் ஜோதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது   ஜோதி படத்தோட வெற்றியை அடையாளப்படுத்துது. இதுவரை இந்த மாதிரி விழா வேறு எங்கும் நடந்திருக்க முடியாது. அதுபோல கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் பல நடிகர்களை உருவாகிய ஜாம்பவான்கள் அவர்கள் ஆசிவாதமும் கிடைத்திருக்கு, அடுத்து ஆச்சிரியப்பட வேண்டிய விசியம் வழக்கமாக ஜேசுதாஸ் அவர்கள் பைட்ஸ் வீடியோ கொடுக்க மாட்டார். ஆனால் இந்த படத்திற்கு அவர்கள் கொடுத்திருப்பதை பார்க்கும்போது வியப்பா இருக்கு, இதனாலே இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்று கூறினார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க செயலாளர் இயக்குனர் “RV உதயகுமார்” அவர்கள் கூறியதாவது.

“திரைப்படக்கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஜோதியை ஏற்றியிருப்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது. ஒரு படம் உருவாவது எவ்வளவு கஷ்டம் என்பது ஊமைவிழிகள் படம் முதற்கொண்டு பல படங்களில் பார்த்துள்ளேன். ஊமைவிழி படத்தை ஏழுநாளில் படமாக்க திட்டமிட்டு நான்கு இயக்குனர்களை கொண்டு உருவாக்கினோம். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஆஸ்தான நடிகர் கேப்டன் விஜயகாந்த அவர்கள். ஒரு நண்பரை நம்பி ஒரு படத்தை எடுக்கும் பொறுப்பை கொடுத்து, அந்த நம்பிக்கை மாறாமல் ஒரு படத்தை எடுத்து அது மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாக்குவது திரைப்படக்கல்லூரி மாணவர்களால்தான் முடியும் அப்படி இந்த TEAM அமைந்திருக்கிறது. இந்த TEAM யை பார்க்கும்போது மீண்டும் நாங்கள் படங்களை தயாரித்து, இயக்கப்போகிறோம் என்பதை உறுதியுடன் சொல்கிறேன்” என கூறினார்.

இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா, இசை வெளியீட்டுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றியுரை கூறி விழாவை முடித்தார்.