அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் , முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் ‘தெஹ்ரிக் ஈ இன்சாப்’ கட்சி 116 இடங்களை கைப்பற்றியது. இருப்பினும் தனித்து ஆட்சி அமைக்க மேலும் சில இடங்கள் தேவைபட்டது. இதனால் உதிரி கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று பாகிஸ்தானின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் , 176 வாக்குகள் பெற்று இம்ரான்கான் வெற்றி பெற்றார்.
இதை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதில் பாஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மம்னூன் உசேன், இம்ரான் கானுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.