மாநில காவல்துறை விளையாட்டுப்போட்டி சாம்பியன் பட்டத்தை வென்றது தென் மண்டல அணி

தமிழக காவல்துறை காவலர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு 2018-ம் ஆண்டிற்கான 58-வது மாநில காவல் மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி மாநகரம்¸ அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கடந்த 06.09.2018-ம் தேதியன்று துவங்கியது. இவ்விளையாட்டுப் போட்டிகளில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்கள் மற்றும் தனிப்பிரிவுகளில் ஆண்¸ பெண் உட்பட மொத்தம் 615 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.வரதராஜூலு¸ இ.கா.ப. அவர்கள் கலந்து கொண்டார். மேலும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.லோகநாதன்¸ இ.கா.ப. அவர்கள்¸ திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர். அமல்ராஜ்¸ இ.கா.ப. அவர்கள் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்விளையாட்டுப் போட்டிகளில் கூடைப்பந்து¸ கைப்பந்து¸ கால்பந்து¸ கையெறிப் பந்து¸ கபடி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தென் மண்டல அணியும்¸ இரண்டாமிடத்தை மத்திய மண்டல அணியும் வென்றது. இப்போட்டியின் முடிவில் திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர். திரு.அமல்ராஜ்¸ இ.கா.ப. அவர்கள் மற்றும் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.வரதராஜூலு¸ இ.கா.ப. ஆகியோர்கள் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.