சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் சிபிஐ பிறப்பித்த உத்தரவு ரத்து!

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு  வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது . தற்போது சிபிஐ பிறப்பித்த அந்த உத்தரவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தயாநிதிமாறன் கடந்த 2004 – 2007 வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். அப்போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சன் தொலைக்காட்சிக்கு சென்னை பிஎஸ்என்எல்லின் தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக கடந்த 2013 ஆம் ஆண்டு சிபிஐ சார்பில் வழக்கு தொடரப்பட்டது.  இதில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், சன் குழுமத்தின் கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் 4 பேர் மட்டுமே தங்களை விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்ததாகவும் இந்நிலையில் சிபிஐ நீதிமன்றம் 7 பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தது .செல்லாது எனவும்  சிபிஐ தரப்பு வாதத்தை முழுமையாக கருத்தில் கொள்ளாமல் சிபிஐ நீதிமன்றம் கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் சிபிஐ தரப்பில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சிபிஐ மேல்முறையீட்டை நிராகரிக்க வேண்டும் என்ற கலாநிதிமாறன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன் 7 பேரும் விசாரணை நீதிமன்றத்தை அணுகி வழக்கை சந்திக்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்.