கமல்ஹாசன் நடித்து வெளியான ‘அன்பே சிவம், செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் வெளியான ‘புதுப்பேட்டை’, ‘கோகுலத்தில் சீதை’, ‘உள்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ ‘உன்னை நினைத்து’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ‘லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில், எம் கோகுல் கிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஸ்ரீ வத்ஸன் இருவரும் இணைந்து ‘4 இடியட்ஸ் (ஃபோர் இடியட்ஸ்)’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
‘4 இடியட்ஸ், திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கியிருக்கிறார். இவர், இயக்குநர் ஹரி நடிகர் பிரகாஷ் ராஜ் பொம்மரிலு பாஸ்கர் ஆகியோர் இயக்கிய படங்களில் இணை இயக்குநராக பணி புரிந்திருக்கிறார்.
இத்திரைப்படத்தில் விஜய் டிவியில் காமெடியில் கலக்கும் புகழ் கதாநாயகனாகவும், காமெடி வில்லனாக வலம் வரும் ரவி மரியா வில்லனாகவும், மும்பை குயின் பிரக்யா நயன் கதாநாயகியாகவும் நடிக்க வின்செண்ட் அசோகன், கும்கி அஷ்வின் திடியன், இந்திரன் பாவா லஷ்மணன் மகாநதி சங்கர், சி எம் பாலா, விஜய் யோன் போன்றோர் குணசித்திர நடிப்பை வழங்கியுள்ளனர். பிளாக் காமெடி ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு இணைத்தயாரிப்பாளராக திருப்பூரை சார்ந்த வி கே முருகேசன் மற்றும் ஜியோ ஏன் என் செல்வராஜ் ஆகியோர் இணைந்திருக்கின்றனர்.
வண்ணமயமான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் யூ.கே செந்தில் குமார் இசையின் மூலம் திரைக்கதைக்கு உயிரோட்டம் செய்திருப்பவர் புதுமுகம் சுபாஷ் முனிரத்தினம் கதையின் சுவை கெடாமல் படத்தொகுப்பை செய்திருக்கிறார். எஸ் என் பாசில் விறுப்பான விறுப்பான கதைக்கு தேவையான விதத்தில் கலை இயக்கம் செய்திருப்பவர் கலை இயக்குநர் முது. பிரபாகரன் அழகான வசனங்களின் மூலம் அழகு சேர்த்திருக்கிறார். டாவின்சி சரவணன் ஒப்பனையில் முத்திரை பதித்திருக்கிறார் பி மாரியப்பன் குடும்பமாக பார்த்து ரசிக்கும் வகையில் யூ ஏ 13 சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.