தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்த், தற்போது இவர் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளிவரவுள்ள படம் ‘அந்தகன்’. இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் ஆன தியாகராஜன் ‘அந்தகன்’ திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இது பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அந்தாதூன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்.
‘அந்தகன்’. படத்தினில் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் சிம்ரன், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக், ஊர்வசி, ப்ரியாஆனந்த், யோகி பாபு, மனோபாலா, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
‘அந்தகன் ‘படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரது இசையில் பாடகர் சித் ஶ்ரீராம் பாடியுள்ள ‘என் காதல்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 7 ஆம் தேதி மாலை வெளியிடப்பட்ட அந்த பாடலுக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அதாவது யூடியுபில் வெளியிடப்பட்ட ஒரே நாளில் சுமார் 1 மில்லியன் லைக்ஸ்களைத்தாண்டி டிரென்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் படக்குழு உற்சாகமடைந்துள்ளனர்.
முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி.எஸ்.தாணு V கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிட உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.