சாணி காயிதம் படத்தில் நடிப்பதற்கு முதலில் பிடிக்கவில்லை! –  செல்வராகவன்.

’சாணி காயிதம்’ திரைப்படத்தில்  தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து  இயக்குனராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் நடிப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது.

புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான செல்வராகவன் இப்படத்தில் சங்கையா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனராக இருந்து நடிகராக மாறிய அவர் கூறுகையில்,

“நான் இயக்குனராக இருக்கும் காலத்தில் நேரத்தைப் பார்த்து வேலை செய்வது கூடாது என்ற ஒரு கொள்கை எனக்கு இருந்தது. செய்யும் பணியில் முழு கவனத்தோடு செயல்படும்போது நேரம் போவதே தெரியாது. அனைத்தும் என் விருப்பப்படி நடந்த பிறகுதான் பேக்கப் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்வேன். . இது அனைத்துப் பணிகளுக்கும் பொருந்தும். நடிப்பது சலிப்பு ஏற்படுத்துவதாகவே இருக்கும் என்று நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அது ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை கற்பிப்பதாக இருந்தது. பொறுமை காத்து என்னுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் அருண் ஆகியோருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என்றார்.

ஸ்கிரீன் சீன் மீடியாவின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட ’சாணி காயிதம்’ மே-6 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படும். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் (சின்னி என்ற பெயரில்) வெளியாகவுள்ளது.