சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ரிலீஸ்!

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த, திரைப் படத்தை ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் எழுதி இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். பரத் சங்கர் இசையமைத்துள்ள இதற்கு வித்து அய்யன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘மாவீரன்’ படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. பின்னர் வெளியான படத்தின் முதல் பார்வை, ஹிட்டான ‘சீன் ஆ சீன் ஆ’ முதல் பாடல் என இவை அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் எழுதி இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராகும். இதில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.