இயக்குநர்-நடிகர் மனோபாலா காலமானார்!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மே 3, 2023) பிற்பகல் 12.55 மணி அளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.

ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன், சத்யராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர், விஜயகாந்த் நடித்த என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்,முரளி நடித்த ஆகாய கங்கை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் மனோபாலா. அவர் சந்திரமுகி, பிதாமகன், பேரழகன், ரமணா, சேது உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

மனோபாலாவின் மனைவி பெயர்  உஷா, மகன் பெயர் ஹரீஷ் ஆகும்.

அவரது இறுதி ஊர்வலம் நாளை (மே 4) காலை 10:30 மணிக்கு மேல்  சாலிகிராமம், எல் வி பிரசாத் லேப் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு வளசரவாக்கம் மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும்.

மனோபாலா மறைவு குறித்துபல்வேறு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.