இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, எதிர்வரும் ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படவிருக்கும் ஒரிஜினல் தமிழ் தொடரான ஸ்வீட் காரம் காபி திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டது. ரேஷ்மா கட்டாலா (Reshma Ghatala) உருவாக்கத்தில் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு லக்ஷ்மி (Lakshmi), மது (Madhoo), மற்றும் சாந்தி (Santhy) நடித்துள்ள இந்த மனதுக்கு உற்சாகமளிக்கும் தொடரை பிஜாய் நம்பியார், (Bejoy Nambiar), கிருஷ்ணா மாரிமுத்து (Krishna Marimuthu), மற்றும் சுவாதி ரகுராமன் (Swathi Raghuraaman) ஆகியோர் இயக்கியுள்ளனர்.
உலகெங்கிலும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதிலும் உள்ள ‘பிரைம்’ உறுப்பினர்கள் ஜூலை 6 முதல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட இந்த தமிழ் தொடரை ஸ்ட்ரீம் செய்யலாம். ஸ்வீட் காரம் காபி தொடரானது பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்ட ஒன்றாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரே ஒரு முறை உறுப்பினர் சந்தாவாக ஆண்டுக்கு ₹1499 மட்டுமே செலுத்தி பணத்தை சேமிப்பதோடு, இதர வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவித்து மகிழலாம்.
மனதுக்கு உற்சாகமளிக்கும் ஸ்வீட் காரம் காபி திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள், ஒரு உணர்ச்சிகரமான குடும்ப நாடகம். ஒரே குடும்பத்தின் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த மூன்று பெண்கள் எவ்வாறு ஒரு நினைவை விட்டு அகலாத வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதை அது அழகாகக் காட்சிப்படுத்துகிறது. அவர்களின் அன்றாட வாழ்வின் பரபரப்பில் இருந்து மட்டுமல்லாமல் அவர்கள் மீது திணிக்கப்படும் பண்டைய நடைமுறைகளில் இருந்தும் விடுதலை அடைவதற்கான ஒரு உந்துதலோடு தொடங்கும் இந்த சாலைப் பயணம், அவர்கள் தங்களை மீண்டும் கண்டறியவும் வாழ்வின் மீதான அவர்களின் ஆர்வத்தை புதுப்பித்த ஒரு பயணமாக மாற்றம் காணுகிறது.
இயக்குனர்கள் பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, மற்றும் சுவாதி ரகுராமன் வெவ்வேறு எபிசோடுகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு, தங்களின் ஈடு இணையற்ற ஆற்றல் மற்றும் சிறப்பான திறன்கள் மூலம் ஒன்றிணைந்து இந்த கதையை தங்கு தடையின்றி மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வகையில் காட்சிப் படுத்தி உயிர்பெறச்செய்திருக்கிறார்கள்.
“இரண்டு வெவ்வேறு இயக்குநர்கள் மற்றும் ஒரு நிகழ்ச்சி வெளியீட்டாளருடன் இணைந்து ஒரு திரைப்படத்தை நான் இயக்குவது இதுவே முதல் முறை. ஆக, வெவ்வேறு எபிசோட்களை தனிப்பட்ட மூன்று இயக்குனர்கள் இயக்கியிருந்தாலும், இந்தத் தொடரில் கதை கதாபாத்திரங்களோடு இணைந்து எவ்வாறு பயணிக்கிறது என்பதை தீர்மானிப்பதில் நாங்கள் அனைவரும் முழுமையாக ஒன்றிணைந்து செயல்பட்டிருக்கிறோம். தனிப்பட்ட முறையில் நாங்கள் ஒவ்வொருவரும் கதைக் கருவின் ஆழ் மட்டத்துக்கு சென்று ஒன்றிணைந்துள்ளோம், என்றனர்.