அஸ்வின் கக்குமானுவும், பவித்ரா மாரியப்பனும் காதலர்கள். இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார், பவித்ரா மாரியப்பனின் அண்ணன் கௌரவ் நாராயணன்.
அஸ்வின் கக்குமானு நடத்திவரும் சிறிய ரெஸ்டாரன்டில் அமானுஷ்யமான சில ஆச்சர்யமான நல்ல விஷயங்கள் நடக்கின்றன. இதனால் அவர், திகில் கலந்த சந்தோஷ குழப்பத்தில் இருந்து வருகிறார். அதைத் தொடர்ந்து அஸ்வின் கக்குமானு சந்திக்கும் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். இதனால், பவித்ரா மாரியப்பனின் அண்ணன் (இன்ஸ்பெக்டர்) கௌரவ் நாராயணன், அஸ்வின் மீது குற்றம் சுமத்துகிறார்.
இந்நிலையில் அஸ்வின் கக்குமானுவின் ரெஸ்டாரன்டில் இருக்கும் அமானுஷ்யமான சக்தி, அங்கு வேலை செய்து வரும் அவரது நண்பர்களை தாக்குகிறது. இதானல் பேய் பற்றிய ஆராய்ச்சி செய்து வரும் காதலி பவித்ரா மாரிமுத்துவின் உதவியுடன் அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்த்து என்பது தான், பீட்சா 3’.
வழக்கமான பெய் டெம்ப்ளேட்டின் விதிப்படி படம் துவங்குகிறது. படத்தின் முதல் பாதியில் தொடர்பில்லாத காட்சிகள் ஒருங்கிணைக்கப் பட்டிருப்பதால், ரசிகர்கள் என்ன நடக்கிறது/ என்பதௌ யூகித்தபடியே இருக்கின்றனர். இந்தக் குழப்பத்தில் இருக்கும்போதே இடைவேளை வருகிறது.
இந்த குழப்பத்திற்கு இரண்டாம் பாதியில் விடை தெரிகிறது! ஆனால், சுவாரசியம் இல்லை! திரைக்கதை ஆக்கத்திலும், காட்சிகள் வடிவமைப்பதிலும் திணறியிருக்கிறார், இயக்குநர் மோகன் கோவிந்த்.
சிறிய அளவிலான ‘மம்மி’ பொம்மையை காட்டி, ரசிகர்களை மிரட்டுவார் என்று பார்த்தால் ஏமாற்றியிருக்கிறார். மழை பெய்யும் இரவு நேரத்தில், அந்த பொம்மையுடன் கதை சொல்லும் போது, ரசிகர்கள் ஆர்வத்துடன் இருகின்றனர். அதன்பிறகு சமநதமே இல்லாத காட்சிகள், மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.
நவீன யுக்திகள் கொண்டு ஆவிகளுடன் பேசும் பவித்ரா மாரியப்பன், திரைக்கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
அபி நக்ஷத்ரா (பேய்), தன்னை பாலியல் கொடுமை கொலை செய்த கயவர்களை பழிவாங்குவதை விட்டுவிட்டு அப்பாவிகளை அடித்து, கோமா நிலையில் ஆஸ்பத்திரிக்கு அனுப்புவது எந்த விதத்தில் நியாயம்!
நாயகன் அஸ்வின் கக்குமானு கதாபாத்திரத்திற்கேற்றபடி, குழப்பமான திகில் மன நிலையில், சிறப்பாக நடித்திருக்கிறார். முடிந்தவரை படத்தினை தன் தோளில் சுமந்திருக்கிறார்.
ஆவிகளுடன் பேசும் ஆப்பை உருவாக்குதோடு, நாயகி பவித்ரா மாரிமுத்து பணி முடிந்து விடுகிறது.
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கவுரவ் நாராயணன், படத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை. இவர் சம்பந்தப்பட்ட காட்சியமைப்புகள் குழந்தைத் தனமாக இருக்கிறது.
அனுபமா குமார், அபி நக்ஷத்ரா, கவிதா பாரதி, காளி வெங்கட், வீரா உள்ளிட்டவர்கள் நடித்த எந்த கதாபாத்திரங்களும், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை!
அருண் ராஜின் இசை, ஒளிப்பதிவாளர் பிரபு ராகவின் ஒளிப்பதிவு ஓகே!
மொத்தத்தில், ‘பீட்சா 3’ பேய்களின் போங்காட்டம்!