அஜால், குஜாலான ஒரு படத்துக்கு சிக்லெட்ஸ், ன்னு பேரு வச்சு, அது மூலமா அறிவுரை சொல்றேன்னு, படத்தை இயக்கியிருக்காரு, இயக்குனர் முத்து எம்.
நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே நெருக்கமான பள்ளித் தோழிகள். பள்ளிப்படிப்பின் இறுதி கட்டத்தில் இருக்கும் இவர்களுக்கு, சாட்டிங், டேட்டிங் மீது அதீத ஈடுபாடு ஏற்படுகிறது. இவர்களது பெற்றோர்களுக்கு, இவர்களை பற்றிய ஒவ்வொரு விதமான கனவுகள். அதற்காக அவர்களை தயார்படுத்தி வருகிறார்கள். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதை, அறிவுரை என்ற பெயரில் அபத்தமாக சொல்வதே ‘சிக்லெட்ஸ்’.
முதன்மையான கதாபாத்திரத்திரங்களில் நடித்திருக்கும் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர், நடிப்பதை விட கவர்ச்சி காட்டுவதிலும், அழுக்கான வசனங்கள் பேசுவதிலும் தங்களது திறமையினை போட்டி போட்டு காட்டியிருக்கின்றனர்.
காதலிக்கும் பெயரில், இவர்களை படுக்கையறைக்கு அழைத்துச் செல்லும் இளைஞர்களாக சாத்விக் வர்மா, சிக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாக் ராபின்சன் மற்றும் ஆரோன் ஆகியோர், இயக்குனரின் விருப்பத்திற்கேற்ப துள்ளிக்குதித்துள்ளனர்.
பெற்றோர்களாக நடித்திருக்கும் சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் மற்றும் பாட்டி வேடத்தில் நடித்திருக்கும் நடிகை என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்ப்பதை விட, வல்காரிட்டிக்கு வலு சேர்த்துள்ளனர். சில இடங்களில், சிரிக்க வைக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமாரின் கேமரா, பெரும்பாலும் பெண்களின் அங்கங்களையே சுற்றி வருகிறது. இதில், ரசிகர்கள் பெருமூச்சு விட வைக்கும் சில காட்சிகளும், உவ்வேக்… காட்சிகளும் இருக்கிறது.
இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் ஓகே.
இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில், படத்தை இயக்கியிருக்கிறேன். என்று சொல்லும் இயக்குனரின் நோக்கம், வேறாக இருக்கிறது. போதை, பெண்கள் என ஜாலியாக சுற்றித் திரிய அனைத்து வசதிகளும், எளிதாக கிடைப்பதாக காட்சி படுத்தியிருப்பது மிகவும் ஆபத்தானது. இயக்குனருக்கே சரியான புரிதல் இல்லாத போது, இதை பார்ப்பவர்களுக்கு புரிதல் இருக்குமா, என்பது சந்தேகம் தான்.
பெண் பிள்ளைகள் என்றாலே, செக்ஸ் தவிர வேறு எதுவும் இல்லை. என சித்தரிக்கப்பட்டிருப்பது. கேவலம். அதிலும், பிராமண மூதாட்டி நடந்து கொள்ளும் விதம், இயக்குனரின் வன்ம, வக்கிரத்தின் உச்சம்!
மொத்தத்தில், ‘சிக்லெட்ஸ்’. மனநோயாளியின் படைப்பு!