நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது!

நடிகர் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கி வரும் ‘வர்மா’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இவர்

சென்னை மந்தைவெளியில்  நண்பர்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு அதிகாலை 4 மணியளவில் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் சுசுகி பலினோ காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றிருக்கிறார்.  அப்போது  அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த ஒரு ஆட்டோவின் மோது பயங்கரமாக மோதியுள்ளது. . இதில், ஆட்டோவில் அமர்ந்திருந்த ஓட்டுநர் காமேஷ் படுகாயமடைந்தார்.

ஆட்டோ மீது மோதிய பிறகு காரை நிறுத்தாமல் அதே வேகத்தில் சென்ற துருவ், முர்ரேஷ் கேட் சாலையில் உள்ள காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வீட்டருகே இருந்த பிளாட்பார்மில் மோதிய கார், பள்ளத்தில் சிக்கியது.

இதையடுத்து, துருவ் மீது அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், விபத்து மூலம் கொடிய காயம் ஏற்படுத்துதல் ஆகிய  பிரிவுகளின் கீழ், அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து பின் காவல்நிலைய பிணையில் விடுவித்தனர். துருவ் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.