‘ரசவாதி’ படத்தில் எனக்கு சூப்பரான கதாபாத்திரம்! – அர்ஜூன் தாஸ்!

டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘ரசவாதி’. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது.

எடிட்டர் சாபு ஜோசப்,

” இயக்குநர் சாந்தகுமார் முதல்முறையாக ஒரு காதல் படம் செய்துள்ளார். இவ்வளவு நாட்கள் வில்லனாக பார்த்து வந்த அர்ஜூன் தாஸ் சாக்லேட் பாயாக நடித்திருக்கிறார். சுஜித் வில்லனாக மிரட்டியிருக்கிறார். லவ், ஆக்‌ஷன் என படம் சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் ரெஸ்பான்ஸூக்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.

நடிகர் அருள்ஜோதி,

‘மெளன குரு’ தான் எனக்கு முதல் படம். ‘மகாமுனி’ படத்தில் சாந்தகுமார் சார் கூப்பிட்டபோது எனக்கு அந்த கதாபாத்திரம் செட் ஆகவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து இந்தப் படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி!”.

நடிகர் ரிஷிகாந்த்,

” எனக்கு பிடித்த இயக்குநர் சாந்தகுமார் அவருடைய படத்திலேயே நான் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.  படக்குழுவினர் அனைவருடனும் வேலைப் பார்த்தது சந்தோஷம்!” என்றார்.

ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசு,

“இது எனக்கு முதல் படம். முதல் படம் என்று இல்லாமல் வேலை செய்வதற்கு அனைத்து சுதந்திரத்தையும் இயக்குநர் சாந்தகுமார் கொடுத்தார். கொடைக்கானல், மதுரை ஆகிய இடங்களில் படமாகிக்கியுள்ளோம். என்னுடைய முதல் படமே சாந்தகுமார் சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!”.

இணைத்தயாரிப்பாளர் கோவர்தன்,

“நாம் இணைத் தயாரிப்பு செய்யும் முதல் படம் இது. வித்தியாசமாக ரொமாண்டிக் கதை முயற்சி செய்கிறேன் என்று சாந்தகுமார் சொன்னார். படம் நன்றாக வந்திருக்கிறது” என்றார்.

நடிகர் ஜி.எம்.சுந்தர்,

‘ரசவாதி’ என்ற டைட்டிலே பிரமாதமான விஷயம். தனக்குள் ஏற்படும் விஷயத்தால் ஆளே மாறிப்போகும் ஒருவனின் கதைதான் இது. ‘மகாமுனி’ படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்தார். அதேபோலதான், இந்தப் படத்திலும். அர்ஜூன் தாஸ், தான்யா என உடன் நடித்தவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.

நடிகர் சுஜித்,

“சில இயக்குநர்கள் தங்களுக்குப் பிடித்த சேஃப் ஜானரிலேயே படம் எடுக்க விரும்புவார்கள். ஆனால், சாந்தகுமார் சார் அதை உடைக்க விரும்பி ‘ரசவாதி’ படம் எடுத்திருக்கிறார். படம் உங்களுக்குப் பிடித்தபடி வந்திருக்கிறது என்று நம்புகிறேன்”.

நடிகை தான்யா ரவிச்சந்திரன்,

“இந்த வாய்ப்பு கொடுத்த சாந்தகுமார் சாருக்கு நன்றி. உடன் நடித்த அர்ஜூன் தாஸ் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. இதில் என் கதாபாத்திர பெயர் சூர்யா. இதற்கு முன்பு நான் நடித்திருந்த படங்களில் இருந்து இந்த கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும்” என்றார்.

நடிகர் அர்ஜூன் தாஸ்,

“இதற்கு முன்பு பேசிய எல்லோருமே அவர்கள் கதாபாத்திரத்திற்காக நன்றி சொன்னார்கள். அதுபோலதான் எனக்கும் சூப்பரான கதாபாத்திரம். கோவாவில் படப்பிடிப்பில் இருந்தபோது என்னை சாந்தகுமார் சார் அழைத்தார். அவர் என்னை தாஸ் என்றுதான் கூப்பிடுவார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், என அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. சாந்தகுமார் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது மகிழ்ச்சி.” என்றார்.

இயக்குநர் சாந்தகுமார்,

“என்னுடைய படம் சிறப்பாக உள்ளது என்று நீங்கள் சொன்னால் அதற்கு முக்கிய காரணம் என்னுடைய குழு தான். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவை சேர்ந்தவர்கள், பப்ளிசிட்டி என எல்லாருமே தங்கள் சிறந்த உழைப்பை கொடுத்துள்ளனர். ‘ரசவாதி’ சிறப்பாக வந்துள்ளது. ‘மகாமுனி’, ‘மெளனகுரு’ படத்திற்கு அடுத்தபடியாக இந்தப் படம் வேறொரு அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். படம் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.