உலக நாயகன் கமல்ஹாசன், ரேகா, ரோஷினி, ஜனகராஜ் மற்றும் பலரது நடிப்பினில் கடந்த நடித்துள்ளனர். 1991 ஆம் ஆண்டு வெளியான படம் குணா. இந்தப் படத்தினை சந்தான பாரதி இயக்கியிருந்தார். குணா படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. ‘டெவில்ஸ் கிச்சன்’ என அழைக்கப்படும் ஒரு குகையில், பாடல் மற்றும் சில காட்சிகளை படமாக்கினர். படம் வெளிவந்த பிறகு, ‘குணா குகை’ என அழைக்கபட்டது.
இந்த குணா குகையை மய்யப்படுத்தி அண்மையில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ எனும், மலயாள திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, ‘குணா’ திரைப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரையரங்குகளில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியிட ‘பிரமிட் குரூப்’ நிறுவனம் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது, ‘குணா’ திரைப்படத்தின் பதிப்புரிமையை தங்கள் வசம் இருப்பதாகவும், அதனால் படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்கவும் கோரியிருந்தனர். இதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார், ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவன தரப்பில், விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி,
‘’குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 2008 முதல் 2013 ம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையை கோர முடியாது என தெரிவித்தார். மேலும் பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தான் படத்தின் திரையரங்கில் வெளியிடுவதற்கான உரிமையை வைத்திருப்பதால், குணா படத்தை மறு வெளியிடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.’’ என வாதிட்டார்.
இதை ஏற்ற நீதிபதி, ‘’குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவரை நியமித்து, குணா மறு வெளியீடு திரையரங்க வசூல் தொகையை, இந்த வழக்கின் பெயரில் வரவு வைக்க உத்தரவிட்டு வழக்கினை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.’’ இதன் காரணமாக குணா மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.