‘கடைசி உலகப் போர்’ – விமர்சனம்!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் வித்தியாசமான முயற்சியில் உருவாகியிருக்கும் படம், கடைசி உலகப் போர். ‘ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மென்ட்’டின் சார்பில் அவரே தயாரித்து, எழுதி, இசையமைத்து இயக்கியிருப்பதுடன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் நாசர் , நடராஜன் சுப்ரமணியம் (நட்டி) , அனகா , அழகம் பெருமாள் , ஹரிஷ் உத்தமன் , முனிஷ்காந்த் , சிங்கம்புலி , கல்யாண் மாஸ்டர் , இளங்கோ குமரவேல் , தலைவாசல் விஜய் , மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

‘கடைசி உலகப் போர்’ திரைப்படத்தின் கதை எதிர்காலத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது 2028-ம் ஆண்டு ஐ.நா சபையிலிருந்து சீனா விலகுகிறது. அதைத்தொடர்ந்து சீனா தலைமையில் சில நாடுகள் சேர்ந்து ‘ரீபப்ளிக்’ என்ற அமைப்பும், மற்ற நாடுகள் ஒரு அமைப்பினையும் உருவாக்குகின்றன. இதில் இந்தியா எந்த அணியிலும் சேராமல் நடுநிலை வகுத்து வருகிறது.

தமிழ்நாட்டின் முதல்வர் நாசரின் மைத்துனர் நட்டி நட்ராஜ் தனது விருப்பப்படி, நாசரையும் அவரது மகளான அனகாவையும் ஆட்டிவைத்து ஒரு ஜனநாயக விரோத சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார். ஐநாவின் ஆயுத பயிற்சி பெற்ற ஹிப்ஹாப் ஆதிக்கும், அனகாவுக்கும் இடையே காதல் உருவாகிறது. இது நட்டி நட்ராஜின் திட்டங்களுக்கு எதிராக இருக்கிறது. இதனால் தனது செல்வாக்கினை பயன்படுத்தி ஆதியை தீவிரவாதியாக சித்தரிக்க, ஆதி இந்திய ராணுவத்தால் கைது செய்யப்படுகிறார்.

இந்நிலையில், சீனாவின் ஆதரவு நாடான இலங்கை படையின் ஒரு பிரிவு, தமிழ்நாட்டின் வழியாக இந்தியாவிற்குள் புகுந்து சென்னையை கைப்பற்றி, தமிழ்நாட்டின் முதல்வரை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் கடைசி உலகப்போரின் கதை.

ஐநாவின் ஆயுத பயிற்சி பெற்றவராக நடித்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. குறைவான காதல் காட்சிகள். அதிரடி சண்டைக்காட்சிகள் அதிகம். காதல் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் சுவாரசியம் குறைவாக இருக்கிறது. நம்பதகுந்த காட்சிகள் இல்லாதது படத்தின் பலவீனம்.

ஹிப் ஹாப் ஆதியின் காதலியாக அனகா. அழகாக தெரிகிறார், நடிப்பில் குறைவில்லை.

கிங் மேக்கராக நட்டி நட்ராஜ். இவருக்கு ஹிஹாப் ஆதியை விட காட்சிகள் அதிகம். அவரது வழக்கமான நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்க்கிறார்.

மக்களின் மேல் பரிவு கொண்ட முதலமைச்சராக நடித்திருக்கும் நாசர் நடிப்பு சிறப்பு!

சீமானை நக்கலடிப்பதாக இருக்கிறது, அழகம் பெருமாள் நடித்திருக்கும் புலிப்பாண்டி கதாபாத்திரம். சிரிக்க வைக்கிறார்.

வழக்கமான பாணியை தவிர்த்த ஹிப் ஹாப் ஆதியின் இந்த வித்தியாசமான படைப்பு பாராட்டுக்குரியது. உலகின் பல பகுதிகளில் நடக்கும் போர்கள், மக்களிடையே எந்தவிதமான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. என்பதை சொல்லி வாழும் காலத்தில் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் வாழ வலியுறுத்தியிருப்பது சிறப்பு! ஆனால் அதற்கு வாய்ப்பில்லை.

‘கடைசி உலகப் போர்’ வித்தியாசமன முயற்சி!