‘ல்தகா சைஆ’ – விமர்சனம்!

நாயகன் சதா நாடார், நாயகி மோனிகா சலினா இருவரும் காதல் மணம் முடித்த தம்பதியினர். அநேக வசதிகளுடன் இவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாள் சதா நாடார் ஒரு கனவு காண்கிறார். அடுத்த நாள் அந்தக் கனவு அப்படியே நடக்கிறது. முதலில் சாதரணமாக எடுத்து கொள்ளும் சதா நாடார், அவரே மனைவியை கொலை செய்வது போல் கனவு வருகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைகிறார். இதன் பிறகு அவர் என்ன செய்தார் என்பது தான், ‘ல்தகா சைஆ’ படத்தின் கதை.

நிஜமான தம்பதியினரான சதா நாடாரும், மோனிகா சலினாவும் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களே படத்தினை இயக்கி தயாரித்திருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமாவின் மேல் இருக்கு ஈர்ப்பு காரணமாக எதை பற்றியும் கவலை படமால், தங்களுக்கு என்ன தோன்றியதோ அதை செய்திருக்கிறார்கள்.

நாயகன் சதா நாடாரை விட, கவர்ச்சி நாயகியாக நடித்திருக்கும் மோனிகா சலினா ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.

சதா நாடார், மோனிகா சலினா இவர்களோடு இன்னும் சில நடிகர்கள் நடித்துள்ளனர்.

க்ரைம் சஸ்பென்ஸுக்குரிய அனைத்து அம்சங்கள் இருந்தும், குழப்பமான திரைக்கதையின் பலவீனத்தால் ரசிக்கமுடியாமல் போகிறது.

இசையமைப்பாளர் ஜான்சன்,  ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.மனோகுமார் ஆகியோரின் பங்கு ஓகே.

மொத்தத்தில், ‘ல்தகா சைஆ’ அய்யோ!