‘மழையில் நனைகிறேன்’ ‘க்ளைமாக்ஸ்’, டச்சிங்கா இருக்கும். யூகிக்க முடியாது! – இயக்குநர் டி.சுரேஷ்குமார்!

ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில், பி. ராஜேஷ் குமார், ஶ்ரீ வித்யா ராஜேஷ் தயாரித்துள்ள படம், மழையில் நனைகிறேன். டி.சுரேஷ்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில், அன்சன்பால், ரெபா மோனிகா ஜான் இருவரும் காதலர்களாக நடித்திருக்க, இவர்களுடன் ‘சங்கர்குரு’ ராஜா, மாத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் 12 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

கிருஸ்துவ மதத்தை சேர்ந்த நாயகன் அன்சன்பால், இந்து மதத்தை சேர்ந்த ரெபா மோனிகா ஜான் இருவரும், ஒரு மழை பெய்யும் நேரத்தில் சந்திக்கின்றனர். அதன் பின்னர் இருவருக்குள்ளும் காதல் உருவாகிறது. அதன் பின்னர் மதங்கள் பிரிக்காத இவர்களது காதலை யார் பிரித்தனர். பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தனரா, இல்லையா? என்பது தான் ‘மழையில் நனைகிறேன்’, படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

‘மழையின் நனைகிறேன்’ படம் குறித்து, அதன் இயக்குநர் டி.சுரேஷ்குமார் கூறியதாவது..,

மலையாளத்தில் வெளியான ‘ஆபிரகாமின்டே சந்தாதிகள்’ திரைப்படத்தில் நடிகர் மம்முட்டியுடன் நடித்து, சிறந்த பெயர் பெற்ற, எல்லோராலும் கவனிக்கப்பட்ட நடிகர் அன்சன்பால், இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘ஜருகண்டி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார். இருவருடைய நடிப்புமே சிறப்பாக இருக்கும். நிஜமான காதலர்களைப் போல் நடித்துள்ளனர். இருவருடைய நடிப்பும் குறிப்பாக க்ளைமாக்ஸில் மிகச்சிறப்பாக இருக்கும். பாடல்கள் அனைத்துமே யூடியுபில் அனைவராலும் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக ‘உன் காதல் பார்வை’ பாடல், அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடலை, பாடகர் ஹரிச்சரணுடன் இணைந்து தயாரிப்பாளர் ஶ்ரீ வித்யா ராஜேஷ் பாடியிருக்கிறார். இசையமைத்திருப்பவர் விஷ்னு பிரசாத்.  பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. இவருடைய பின்னணி இசை படத்தின் பலம். கல்யாண் ஒளிப்பதிவு பிளசன்ட்டா இருக்கும்.

‘மழையில் நனைகிறேன்’ படத்தை பொறுத்தவரை, ஆபாசம், வன்முறை இல்லாத ஒரு ரொமான்டிக் என்டெர்டெயினர். ஃபேமிலியா பார்க்கூடிய படமாக இருக்கும். ‘க்ளைமாக்ஸ்’ காட்சி எளிதில் யூகிக்க முடியாது. ஃபீலிங்கா… டச்சிங்கா இருக்கும். காதலர்களுக்கான ஒரு படம்னு கூட சொல்லலாம். டிசம்பர் 12 ஆம் தேதி ரிலிஸாகிறது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டி, ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். என்றார்.