‘35 சின்ன விஷயம் இல்ல’ – விமர்சனம்!

கடந்த செப்டெம்பர் மாதம் 6 ஆம் தேதி தெலுங்கில் வெளியான ’35 சின்ன கதா காது’ திரைப்படத்தின் தமிழ் டப்பிங் படமே ‘35 சின்ன விஷயம் இல்ல’. இதில் நிவேதா தாமஸ், பிரியதர்ஷி, விஷ்வதேவ், கே.பாக்யராஜ், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நந்த கிஷோர் இமானி இயக்கியிருக்கிறார். ‘Suresh Productions’, ‘S Originals Waltair Productions’ தயாரித்துள்ளது.

விஷ்வதேவ் ராச்சகொண்டா – நிவேதா தாமஸ்  தம்பதியினருக்கு அருண் – வருண் என பள்ளி செல்லும் இரண்டு பிள்ளைகள். இவர்களில் அருண் கணக்கு பாடத்தில் ரொம்ப வீக். பூஜ்ஜியத்தின் மீது தனக்கு ஏற்படும் சந்தேகத்தினை கேட்கும் ஆசிரியர்கள் அவனை அதிக பிரசங்கியாக சித்தரித்து விடுகின்றனர். அதோடு கணக்கு பாடத்தின் புரிதல் இல்லாததால் அவன் எப்பவுமே பூஜ்ஜியம் மதிப்பெண்னையே பெறுகிறான். அவனது சந்தேகத்தை எந்த ஆசிரியராலும் தீர்த்து வைக்க முடியவில்லை!

இதற்கிடையே, அருண் வகுப்பிற்கு வரும் புதிய ஆசிரியர் பிரியதர்ஷி புலிகொண்டாவாலும் அவனது சந்தேகத்தினை தீர்த்து வைக்கமுடியவில்லை. மேலும் அருணை பூஜ்ஜியம் என பெயரிட்டு அவமானப்படுத்துவதோடு, சக மாணவர்கள் அவனுடன் பழகுவதற்கும் தடை ஏற்படுத்துகிறார். அதோடு, பள்ளி நிர்வாகம் அருணின் அப்பா விஷ்வதேவ் ராச்சகொண்டாவை அழைத்து இது குறித்து கூறுகிறது. மனம் உடைந்த அவர் மகனை சமஸ்கிருத பள்ளியில் சேர்க்க முயற்சி செய்கிறார். அதற்கு நிவேதா தாமஸ் மறுத்து விட்டு மீண்டும் அதே பள்ளியில் படிக்க வைக்க முயற்சி செய்கிறார். இதன் பிறகு என்ன நடந்த்து என்பது தான், ‘35 சின்ன விஷயம் இல்ல’ படத்தின் கதை.

போரடிக்காத திரைக்கதையின் மூலமாக, வெகு காலத்திற்கு பிறகு குடும்பத்தினர், குழந்தைகளோடு அமர்ந்து பார்க்கக்கூடிய படமாக  ‘35 சின்ன விஷயம் இல்ல’ படம் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. அன்பான அளவான குடும்பம், கணக்கு பாடம் என்றாலே ஒடும் சிறுவன். ஒரு சில காட்சிகள் தவிர, எந்தவிதமான செயற்கை பூச்சுகளும் இல்லாத ரசைக்க வைக்கும் காட்சியமைப்புகள். உடன்படிக்கும் மாணவனின் பிரிவை ஏற்று கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவனாக, அம்மாவிடம் பாசத்தை கொட்டும் மகனாக, சிறுவன் அருண் பொதுலா சிறப்பாக நடித்திருக்கிறார்.

நிவேதா தாமஸின் கணவராக நடித்திருக்கும் விஷ்வதேவ் ரச்சகொண்டா, இளம் தந்தையாக மகன் மீது கோபம் கொண்டாலும், அவனது எதிர்காலத்தை நினைத்து கலங்கும் காட்சிகளிலும், நிவேதா தாமஸுடனான ரொமேன்ஸ் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பிஅனி வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒட்டுமொத்த படத்தையும் தனது திறமையான நடிப்பினால் வசப்படுத்திக் கொள்கிறார், நிவேதா தாமஸ். மனைவியாகவும், தாயாகவும் தனது கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். கணவனுடன் கோபம் கொள்ளும்போதும், பிள்ளைகளை அரவணைக்கும் போது சிறப்பாக நடித்திருக்கிறார்.

கணக்கு வாத்தியாராக ‘சாணக்ய வர்மா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியதர்ஷி புலிகொண்டா, கச்சிதமான நடிப்பினை கொடுத்திருக்கிறார்.

பள்ளி தலைமை ஆசிரியராக கே.பாக்யராஜ், நிவேதா தாமஸ் சகோதரராக நடித்திருக்கும் கிருஷ்ணா தேஜ், இளைய மகனாக நடித்திருக்கும் சிறுவன் அபய் சங்கர், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கெளதமி என அனைவருமே, அவரவர் கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.

விவேக் சாகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப சிறப்பாக இருக்கிறது.  ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு சிறப்பு.

கற்றுக்கொள்வது, என்ற கருத்தை தங்கள் திரைக்கதை மூலம் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

படத்தை தொய்வில்லாமல் இயக்கியிருக்கும் நந்த கிஷோர் எமானி, மக்களிடம் எதை சொல்ல வேண்டும் என்பதை குழப்பமில்லாமல் அழகாக சொல்லி, படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘35 சின்ன விஷயம் இல்ல’குடும்பத்துடன் பார்க்க வேண்டிய சிறப்பான படம்!