இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தண்டேல்’ திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். உண்மை சம்பவங்களை தழுவிய இந்த திரைப்படத்தை, கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில், படத்தில் பணியாற்றிய நடிகை சாய் பல்லவி கூறியிருப்பதாவது..,
‘தண்டேல்’ படத்தின் கதை, மீனவர்களின் உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டிருந்ததால் என்னைக் கவர்ந்தது. பாகிஸ்தானில் சிறைபி டிக்கப்பட்டிருக்கும் தன் கணவனை மனைவி எப்படி மீட்டு வந்தார். என்பது தான் கதை. இது ரசிகர்களுக்கு சரியான விதத்தில் சென்றடையும் என கணித்தேன். அதனால் நடித்தேன்.
நடனத்தை பொறுத்தவரை, நான் நன்றாக ரசித்து ஆடுவேன். விஜய் சாரின் நடனத்தில் ஒரு தனி கிரேஸ் இருக்கும். அதை பார்க்கும் போது நாமும் ஆட வேண்டும் என்று தோன்றும். விஜய் சார் சிம்ரன் மேடம் நடனமாடும் போது அதை பார்த்து உற்சாகம் அடைந்திருக்கிறேன். நடன அசைவுகளை துல்லியமாக ஆட வேண்டும் என்பதை விட அதை அனுபவித்து ஆட வேண்டும் என எண்ணுவேன்.
‘தண்டேல்’ படத்தில் பல நூறு நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடும் போது, அது சவாலானதாகத் தான் இருந்தது. குறிப்பாக, இந்த பாடலுக்கு நடனமாடும் போது நாக சைதன்யா உடன் இணைந்து நிறைய ஒத்திகை பார்த்தோம். அந்தப் பாடலில் என்னை விட நாக சைதன்யா நன்றாகவே நடனமாடி இருக்கிறார். ‘தண்டேல்’ திரைப்படம் ரசிகர்களுக்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என உறுதியாக நம்புகிறேன்.’ என்றார்.