‘நாடோடிகள்’ நடிகை, அபிநயா திருமண அறிவிப்பு!

சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், நடிகை அபிநயா. அதன் பிறகு  ‘ஈசன்’, ‘குற்றம் 23’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், தற்போது தமிழில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அபிநயா  15 ஆண்டுகளாக காதலித்து வரும் ஒருவரை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாகவும். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். அப்புகைப்படத்தில், மோதிரங்கள் மாற்றிக்கொண்ட இருவரது கைகள் மட்டும் இடம் பெற்றுள்ளது. அதில், `எங்க பயணம் இன்னைக்கு ஆரம்பம்`னு குறிப்பிட்டுள்ளது.