கார்த்தியின் நடிப்பில்,பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு, வெளியான படம் ‘சர்தார்’. இப்படத்தில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, ‘யூடியூப்’ ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை.
இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. அதைத்தொடர்ந்து பி.எஸ். மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இதில் எஸ் ஜே சூர்யா, மாளவிாக மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
‘சர்தார் 2’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் சண்டைக்காட்சிக்கான படப்பிடிப்பு சமீபத்தில் மைசூரில் நடந்த போது நடிகர் கார்த்திக்கு காயம் ஏற்பட்டதாக அதை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.காலைல ஏற்பட்ட வீக்கம் குறைய ஒரு வாரம் ஆகும் என்பதால் வீட்டில் அவர் ஓய்வில் இருந்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டப்பிங் பணி தொடர்பான புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இப்படத்தை வரும் ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.