HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மதுரை மற்றும் திருச்சியில் நடைபெற்றது.
சீயான் விக்ரம் பேசுகையில்,
” மங்கையர்க்கரசி என்ற பெயரே சிறப்பாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளான நீங்கள் அனைவரும் கல்வியில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் கண்ட கனவுகளை நனவாக்குவதற்காக தொடர்ந்து செல்லுங்கள். பெரிதாக கனவு காணுங்கள்.
இயக்குநர் அருண் குமாரை நான் ‘சித்தா’ என்று தான் அழைப்பேன். தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த இயக்குநர். இந்தத் திரைப்படத்தை அழகாக இயக்கியிருக்கிறார். இந்த படம் மதுரையில் நடக்கும் கதை. அதனால்தான் உங்களை சந்திப்பதற்கு வேட்டி அணிந்து வந்திருக்கிறேன். அதனால் தான் மீசையை முறுக்கி இருக்கிறேன். ஆனால் படத்தில் என்னை அழுக்காக்கி நாஸ்தி செய்திருக்கிறார்கள். அதனால் தான் தற்போது கூலிங் கிளாஸ் அணிந்து இருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு ஒரே ஒரு உடை தான். படம் முழுவதும் அந்த உடையில் தான் இருப்பேன்.
கமர்சியல் சினிமா என்று சொல்வார்கள் தானே.. அதனை யதார்த்தமாக உருவாக்கி இருக்கிறோம். அதனால் இந்த படத்தை பார்த்து நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள். இந்தப் படத்தில் இடம்பெறும் ரொமான்ஸ் காட்சிகளை இயக்குநர் மிகவும் ஷட்டிலாக காண்பித்திருக்கிறார். இதற்கு உங்களின் வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றவுடன்.. எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தருணத்திலேயே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தப் படத்தில் அழகான துஷாராவையும் பார்க்கலாம். ஆக்ரோஷமான துஷாராவையும் பார்க்கலாம். அவருடைய நடிப்பு பிரமாதம். அவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அதற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
அத்துடன் மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களிலும் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மேடையில் பாடல் பாடியும், நடனம் ஆடியும், செல்ஃபி எடுத்துக் கொண்டும் அனைவரையும் சீயான் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் உற்சாகப்படுத்தினார்கள்.