யோகி பாபு நடித்த ‘ஸ்கூல்’ படத்திற்கு நடிகர் உபேந்திரா வாழ்த்து!

இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார்கள்  மற்றும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.முழுக்க முழுக்க ஸ்கூல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்  R.K. வித்யாதரன்.

இது ஒரு உளவியல் ரீதியான திரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை ,தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களை பற்றி அலசி ஆராயும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம். கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படத்தை இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான பாடமாக உருவாக்கி இருக்கிறோம்.  படம் கோடை கொண்டாட்டமாக இம்மாதம்  23 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு பிரபல கன்னட நடிகர் உபேந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் R. K. வித்யாதரன் நடிகர் உபேந்திராவை நேரில் சந்தித்து ஸ்கூல் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரையும் காண்பித்து வாழ்த்து பெற்றார். ஸ்கூல் படத்தின் பாடல்கள் மட்டும் டிரைலரை பார்த்துவிட்டு உபேந்திரா அவர்கள் மிக நன்றாக இருப்பதாக கூறியதோடு படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.ஸ்கூல் படத்தின் இயக்குனர் ஆர்.கே வித்யாதரன் ஏற்கனவே உபேந்திரா, ரேணுகா மேனன், ரீமாசென் அகியோரை வைத்து கன்னடத்தில்  ” நியூஸ் ” என்ற பிரபல படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.