இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மின்னும் ஆட்டக்காரர் ஷிவம் டூபே, நிகழ்வின் துவக்கமாக விளக்கேற்றும் விழாவில் கலந்து கொண்டார். தொகுப்பாளருடன் நகைச்சுவை கலந்த உரையாடலில் ஈடுபட்ட அவர், “இது ஒரு வரலாற்றுப் பொழுது. இத்தகைய ஒரு படத் திட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறேன் என்பது பெருமை!, இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்” என தனது உற்சாகத்தையும் வாழ்த்துகளையும் பகிர்ந்தார்.
AGS என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் பல முக்கியப் படங்களில் தயாரிப்பு பொறுப்பாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட டி. சரவணகுமார், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக செயல்படுகிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, இத்திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.
சுரேஷ் ரெய்னாவிடம், அவரது தோழரான எம்.எஸ். தோனியும் இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா? எனக் கேட்டபோது, “அவர் தான் அதுக்கு பதிலளிக்க வேண்டும்!” என சிரித்தபடி பதிலளித்தார். இந்த விழாவில், எடிட்டர் மோகன், இயக்குநர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன், நடிகர் சதீஷ், இயக்குநர் விஜய் மில்டன், இயக்குநர் திருக்குமரன், இயக்குநர் பக்யராஜ் கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
‘இத்தனை திறமைமிக்க அணி மற்றும் ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் போன்ற உறுதியான ஆதரவு கொண்ட தயாரிப்பு நிறுவனத்துடன், “சந்தோஷ் நாராயணனும், ரசூல் பூக்குட்டியும் போன்ற உலகத் தரம் வாய்ந்த கலைஞர்களுடன் வேலை செய்வதும் என் இயக்குநர் பயணத்தைத் தொடங்குவது ஒரு கனவு நனவாகும் தருணம்,” . என இயக்குநர் லோகன் தெரிவித்தார்.
சுரேஷ் ரெய்னா படம் குறித்த மற்ற தகவல்கள், விரைவில் வெளியாக உள்ளன.