“ஹோம்பாலே ஃபிலிம்ஸ்’ வழங்க, ‘க்ளீம் ப்ரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம், ‘மகா அவதார் நரசிம்மா’ அனிமேஷன் திரைப்படம்.
‘மகா அவதார் நரசிம்மா’ படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள்:
கலை கருத்துருவாக்கம் : க்ளீம்.
எழுத்து : ஜெயபூர்ணாதாஸ்.
படத்தொகுப்பு : அஸ்வின் குமார், அஜய்வர்மா.
இசை : சாம்ஸ் சி எஸ்.
தயாரிப்பாளர்கள் ஷில்பா தவான், குஷால் தேசாய், சைதன்யா தேசாய்.
திரைக்கதை இயக்கம் : அஸ்வின் குமார்.
முதன்மை நிதி ஆலோசகர் : ரஜத் சாப்ரா.
பாடலாசிரியர் : தி ஸ்லோகா.
இணைத் தயாரிப்பாளர்கள் : சுபாஷ் சந்திர தவான் – துர்கா பலுஜா.
கூடுதல் திரைக்கதை வசனம் அஸ்வின் குமார் மற்றும் ருத்ரா பி கோஷ்.
ஒலிக் கலவை : கண்ணன் சம்பத் – அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்.
தலைமை தொழில்நுட்ப அதிகாரி சமய் மகாஜன்.
சி ஜி மேற்பார்வை : மகேஷ் குமார் மண்டல்.
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் போலே : கரண் அர்ஜுன்சிங் – ஜஸ்ட் போலே ஆர்ட்.
‘மகா அவதார் நரசிம்மா’ படத்தின் கதை பலரும் அறிந்த, பக்த பிரகலாதனின் கதை தான். சிலர் அறியாமலிருப்பர். அதேபோல் இன்றைய இளைய தலைமுறையினரில் பலர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. மகாவிஷ்ணு, எடுத்த 10 அவதாரங்களில் ஒன்று தான் நரசிம்ம அவதாரம். அதை எடுக்கக் காரணம் என்ன? பிரகலாதன் யார்? என்பதை சொல்லும் பிரம்மாண்டமான அனிமேஷன் திரைப்படம் தான், ‘மகா அவதார் நரசிம்மர்’.
‘மகா அவதார் நரசிம்மர்’ படத்தின் பெரிய பலமே, சிறுவர்களுக்கும், இதுவரை இந்தக்கதை தெரியாதவர்களுக்கும், எளிதில் புரியும்படியாக திரைக்கதை அமைத்திருப்பது தான். படம் முழுவதையும் பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகளுடன் வாய் பிளக்க வைத்திருக்கிறார்கள். அதோடு சிக்கலான புராணக் கதைகளை, சிறுவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும்படியாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இதுவரை வெளியான பிரகலாதன் கதையை, வேறு ஒரு பாணியில், அனிமேஷன் துணையோடு சுவரசியமாகவும், பிரம்மாண்டமாகவும் காட்சிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கிளைமாக்ஸில் நரசிம்மர் அவதாரம் எடுக்கும் மகா விஷ்ணு ஹிரண்ய கசிபுவை அழிக்கும் காட்சி மிரட்டல். காட்சியமைப்பு, காட்சிகளுக்கேற்ற இசையமைப்பு என, ரசிக்கும்படியாக ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறது.
‘மகா அவதார் நரசிம்மா’ , ஆன்மீக பற்றாளர்களுக்கு பிடிக்கும்!