‘பிளாக்மெயில்’ ஒரு பரபரப்பான பொழுதுபோக்கு படைப்பு!” – நடிகை பிந்து மாதவி!

ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘பிளாக்மெயில்’ திரைப்படம், ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அந்தப்படத்தில் நடித்திருக்கும் பிந்து மாதவி தனது அனுபவத்தினை கூறியதாவது..,

‘’ஒவ்வொரு கலைஞரும் தனது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணத்தை தேடிக்கொண்டே இருப்பர்”.

“பெண்கள் தங்களுக்குரிய தனிப்பட்ட இடத்தை பெறுவதற்காக தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இயக்குநர் மு. மாறன் பிளாக்மெயில் படத்தின் கதையை விவரித்த நேரத்தில், அது என்னுடன் உடனடியாக ஒரு இணைப்பை ஏற்படுத்தியது. இது எனக்காகவே காத்திருந்த ஒரு கதாபாத்திரம் போல உணர்ந்தேன். உணர்வும், ஆழமும் கலந்து அவர் உருவாக்கிய என் கதாபாத்திரம், எனக்கு ஒரு பெரிய பொறுப்பை தந்தது. முக்கியமான பல கதாபாத்திரங்களுடன் இணைந்து எனது காட்சிகள் வந்திருக்கின்றன. ஜி.வி. பிரகாஷ்குமார் போன்ற அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகருடன் பணியாற்றிய அனுபவம் அருமை. தேஜு அஸ்வினி, ஸ்ரிகாந்த் மற்றும் மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

நீங்கள் கண்களை இமைக்கவே மாட்டீர்கள்! இது ஒரு அதிரடித் திரில்லர், உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம். இவை அனைத்துக்கும் காரணம் மு. மாறனின் பதற்றமூட்டும் கதைச்சொல்லல்!”. என்றார்.

பிளாக்மெயில் படத்தின் கதை, திரைக்கதை  எழுதி இயக்கியிருக்கிறார், மு. மாறன். தெய்வகனி அமல்ராஜ் தயாரித்திருக்க, ஜே.டி.எஸ் பிலிம் பேக்டரியின் சார்பாக ஜெயக்கொடி அமல்ராஜ் வழங்குகிறார். இசை அமைத்திருக்கிறார் சாம் சிஎஸ். ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய். படத் தொகுப்பு சான் லோகேஷ்.