‘போகி’ –  விமர்சனம்!

‘V i குளோபல் நெட்வொர்க்ஸ்’ பட நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம், போகி. இந்தப் படத்தில் நபி நந்தி, சரத், ‘லப்பர் பந்து’ சுவாசிகா, பூனம் கவூர், வேல ராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – ராஜா C சேகர்,இசை – மரியா மனோகர் ,பாடல்கள் – சினேகன்,வசனம் – S.T. சுரேஷ்குமார், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்,கலை இயக்கம் – A. பழனிவேல், ஸ்டண்ட் – அன்பறிவ், மிராக்கிள் மைக்கேல்,  நடனம் – அசோக் ராஜா. கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் – S. விஜயசேகரன். 10 வருட போராட்டத்திற்கு பிறகு பெயர் மாற்றி வந்துள்ள படம்.

மலை கிராமத்திலிருந்து நகரத்திற்கு மருத்துவம் படிக்க வரும் ஒரு மாணவி. அவர் மருத்துவ கல்லூரியில் நடக்கும் கொடூரத்தை பார்த்துவிடுகிறார். அதனால், அவரும் அவருடைய சுற்றாரும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதே, ‘போகி’ படத்தின் கதை.

நபி நந்தி, அறிமுக நாயகனாக நடித்திருக்கிறார். நடிப்பில் பெரிதாக குறையில்லை. பல படங்களில் நடித்த அனுபவசாலியைப்போல் நடித்திருக்கிறார். தங்கை மீது பாசம் வைத்திருக்கும் அண்ணனாக பாசமாகவும், தங்கைக்கு நடந்த கொடூரத்தினை கண்டு வெகுண்டெழும் போதும் கவனிக்கும்படி நடித்துள்ளார். ‘லப்பர் பந்து’ புகழ் சுவாசிகா, பல வருடங்களுக்கு முன்னர் நடித்திருப்பதால் இளமையாக இருக்கிறார். பெண்களுக்கெதிராக நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களை, பார்வையாளர்களிடம் கடத்தி, கதி கலங்க வைத்துவிடுகிறார். பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், சங்கிலி முருகன் ஆகியோரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜா சி.சேகர் காட்சிகளை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் மரியா மனோகர் இசையில், பாடல்கள் கேட்கும் படி இருக்குஇறது. ரகம். பின்னணி இசையும் ஓகே.

எழுதி இயக்கியிருக்கும் விஜயசேகரன்.எஸ் – சமூக பிரச்சனையையும், பழங்குடி இன மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும், நாட்டில் நடந்த சில உண்மை சம்பவங்களையும் மையமாக கொண்டு திரைக்கதை அமைத்திருந்தாலும், அதை வெறும் சோகமாக மட்டும் சொல்லாமல், நகைச்சுவையாகவும், காதல், ஆக்‌ஷன், பாடல் என்று கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறார்.

படத்தில் சொல்லப்பட்டிருக்கக் கூடிய சமூக ஊடக மோகம், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு பாலியல் ரீதியிலான பிரச்சனைகள், அதை சார்ந்த வியாபாரம் என விழிப்புணர்வு தரும் வகையில் இருக்கிறது, இதற்காகவே இயக்குநர் விஜயசேகரனை பாராட்டலாம்.

‘போகி’ – தலைப்பினைப் போல்!