நடிகர் தினேஷ்க்கு “லப்பர் பந்து” வெற்றிக்குப்பிறகு தண்டகாரண்யம் பெரும் வெற்றிப்படமாக அமையும் . இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தண்டகாரண்யம். இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் , லேர்ன் அண்ட் டெக் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவுபெற்று செப்டம்பர் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.இதன் அறிவிப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
லப்பர் பந்து வெற்றிக்குப்பிறகு நடிகர் தினேஷ் க்கு இந்தப்படம் மிக முக்கியமான வெற்றிப்பபடமாக இருக்கும் என்கிறார்கள் . நடிகர் கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும் என்கிறார்கள்.