Crunchyroll மற்றும் Sony Pictures Entertainment தங்களது Demon Slayer படத்தின் முதல் பாகமான Kimetsu No Yaiba Infinity Castle படத்தை இந்திய திரையரங்குகளில் 2025 செப்டம்பர் 12 அன்று IMAX®️ மற்றும் பிரீமியம் பெரிய வடிவங்களில் வெளியிடுகிறது.
அனிமேஷன் உலகின் மிகப்பெரிய தளமாக விளங்கும் கிரஞ்சிரோல் (Crunchyroll), சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Sony Pictures Entertainment) இணைந்து, எதிர்பார்ப்புகள் நிறைந்த “டீமன் ஸ்லேயர்: கிமெட்ஸு நோ யாய்பா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரைலர்களை வெளியிட்டுள்ளன.
இந்த மாபெரும் மூன்று பாகத் தொடரின் முதலாவது திரைப்படம், வரும் செப்டம்பர் 12, 2025 அன்று இந்தியாவில் மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. IMAX®️ மற்றும் பிற பிரீமியம் திரை வடிவங்களிலும் இப்படம் வெளியாகிறது. படம் ஜப்பானிய மொழியிலும் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு திரையிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
கதை சுருக்கம்,
தன்ஜிரோ கமாடோவின் குடும்பம் ஒரு டீமனால் கொல்லப்பட்டதும், தன் தங்கை நெசுகோ டீமனாக மாறுகிறார், அவளை மீண்டும் மனிதராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், அவர் டீமன் ஸ்லேயர் கார்ப்ஸ் எனும் அமைப்பில் இணைகிறார். தன்ஜிரோ தனது நண்பர்கள் ஜெனிட்ஸு அகட்ஸுமா மற்றும் இனோசுகே ஹஷிபிராவுடன் பல டீமன்களுடன் போராடி வருகிறார். அவரது பயணத்தில், ஹஷிரா எனப்படும் உயர்ந்த தரவரிசை வாள்வீரர்களான பிளேம் ஹஷிரா க்யோஜுரோ ரெங்கோகு, சவுண்ட் ஹஷிரா தெங்கென் உஸுயி (என்டர்டெயின்மென்ட் டிஸ்ட்ரிக்ட்), மிஸ்ட் ஹஷிரா முஇசிரோ டோகிடோ மற்றும் லவ் ஹஷிரா மிட்சுரி கன்ரோஜி (ஸ்வார்ட்ஸ்மித் வில்லேஜ்) ஆகியோருடன் களம் இறங்கினார்.
டீமன் ஸ்லேயர் கார்ப்ஸ் மற்றும் ஹஷிராக்கள், எதிர்கால மாபெரும் போருக்கு தயாராக “ஹஷிரா பயிற்சி” மேற்கொண்டிருந்தபோது, டீமன்களின் தலைவன் முசான் கிபுட்சுஜி உபுயஷிகி மாளிகையில் தோன்றுகிறார். போராளிகளின் தலைமையகம் ஆபத்தில் சிக்க, தன்ஜிரோவும் ஹஷிராக்களும் புறப்படுகிறார்கள். ஆனால் முசானின் வலிமையால் அவர்கள் அனைவரும் மர்மமான உலகமான இன்ஃபினிட்டி கேஸ்டிலுக்குள் இழுக்கப்படுகிறார்கள். அங்கு டீமன்களுக்கும் டீமன் ஸ்லேயர் கார்ப்ஸ் வீரர்களுக்கும் இடையே நடக்கும் போர் தான் இப்படம்.