‘உருட்டு உருட்டு’ –  விமர்சனம்!

‘ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்’ சார்பில், பத்ம ராஜு ஜெய்சங்கர் தயாரித்திருக்கும் இந்த ‘உருட்டு உருட்டு’ படத்தின்  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாஸ்கர் சதாசிவம். இதில் கஜேஷ் நாகேஷ் (சந்துரு), ரித்விகா ஸ்ரேயா (சர்மி), மொட்டை ராஜேந்திரன் (மூணு பொண்டாட்டி முனுசாமி), அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் (டபுள் டாக்குமெண்ட் தர்மராஜ்) ஆகியோர் நடித்துள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு ஆளான நாயகன் கஜேஷ் நாகேஷை காதலிக்கும் நாயகி ரித்விகா, அவனை அந்தப்பழக்கத்திலிருந்து மீட்க பல வழிகளில் முயற்சி செய்கிறார். ஆனால் மீட்க முடியவில்லை. இதனால் சோர்வுறும் அவர், அதிரடியான முடிவை கையிலெடுக்கிறார். அது என்ன? கஜேஷ் நாகேஷ் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டாரா, இல்லையா? ‘உருட்டு உருட்டு’.

நாயகனாக நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ், குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியாதவராக, கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி கச்சிதமாக நடித்திருக்கிறர்.நாயகியாக நடித்திருக்கும் ரித்விகா ஸ்ரேயா, கல்லூரி செல்லும் பணக்கார வீட்டுப் பெண்ணாக சமூக அக்கறை கொண்ட பெண்ணாக சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.

நாயகி ரித்விகா ஸ்ரேயாவின் மாமாவாக நடித்திருக்கும் ‘மொட்டை’ ராஜேந்திரன், ‘மூன்று பொண்டாட்டி முனுசாமி’ என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். அவர் அஸ்மிதா, ஹேமா, சின்னாளப்பட்டி சுகி ஆகியோருடம் இணைந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்டுகிறார். பத்ம ராஜு ஜெய்சங்கர், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, பாவா லட்சுமணன் உள்ளிட்டோரும் ஓகேவான நடிப்பினை கொடுத்துள்ளனர்.

இசையமைப்பாளர் அருணகிரியின் இசையில் பாடல்களும், கார்த்திக் கிருஷ்ணாவின் பின்னணி இசையும் ஓகே. ஒளிப்பதிவாளர் யுவராஜ் பால்ராஜ், ஒளிப்பதிவு பரவாயில்லை.

குடியினால் கெட்டு சீரழியும் இளைஞர்களுக்கு, கிளைமாக்ஸ் மூலம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். இயக்குநர் பாஸ்கர் சதாசிவம்.

உருட்டு உருட்டு – பலமான உருட்டு!