‘ரைட்’  –  (விமர்சனம்) எல்லாமே ராங்க்!

Cast –

Natty, Arun Pandian, Akshara Reddy, Munnar Ramesh, Vinodhini, Thangadurai, Aditya, Yuvina, Roshan Udayakumar, Uday Mahesh, Muthuraman, Ashok Pandian.

Crew –
Written & Directed By – Subramanian RameshKumar
Production By – RTS Film Factory
Producers – Thirumal Lakshmanan & T. Siyamala
Executive Producer – Francis Markus
Director of Photography – M.Padmesh
Music Composer – Guna Balasubramanian

‘RTS Film Factory’ சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா ஆகியோரின் தயாரிப்பில்,  நட்டி சுப்ரமணியம், அருண் பாண்டியன், அக்‌ஷரா ரெட்டி, மூணார் ரமேஷ், வினோதினி வைத்யநாதன், ஆதித்யா ஷிவக்குமார், யுவினா பார்த்வி ஆகியோரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், ‘ரைட்’. இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார், சுப்ரமணியன் ரமேஷ் குமார். இவர் நட்டி சுப்ரமணியத்தின் உதவியாளர், என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பத்மேஷ் ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்திருக்கிறார், குணா பாலசுப்ரமணியன்.

அருண் பாண்டியன், வெடி குண்டுகளை (Bomb Squad) செயலிழக்கச் செய்யும் பணி நிறைவு பெற்ற நிபுணர். இவர் லேப்டாப், மொபைல் போன் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களின் பழுது நீக்கும் கடையை நடத்தி வருகிறார். ஒரு நாள் திடீரென காணாமல் போன தனது மகன் ஆதித்யா ஷிவக்குமாரை கண்டுபிடித்து தர வேண்டி, காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வருகிறார். வழக்கம்போல் பணியிலிருப்பவர்கள் அவரது புகாரை கவனிக்காமல் இருக்கின்றனர். அதனால் கமிஷனர் அலுவலகம் செல்கிறார். அங்கும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் காவல் நிலையம் வருகிறார். அச்சமயத்தில்,  ‘காவல் நிலைய புகார் எழுத்தர்’ மூணார் ரமேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் அக்‌ஷரா ரெட்டியும், திருடப்பட்ட ஒரு லேப்டாப்பினை ஆன் செய்த ஒரு சில நொடிகளில், அது தானாகவே இயங்கத் தொடங்கி, ஒரு நிழலுறுவம் தோன்றுகிறது. அந்த உருவம் காவல் நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அருண் பாண்டியன் உள்ளிட்ட அங்கிருப்பவர்களை பணயக் கைதிகளாக சிறைபிடிக்கப்படுகின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது? அருண் பாண்டியனின் மகன் ஆதித்யா ஷிவக்குமார் கண்டுபிடிக்கப்பட்டாரா, இல்லையா? என்பது தான், ‘ரைட்’. படத்தின் கதை.

திரைப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார், திரைப்படத்தின் பெயரை ‘ரைட்’ என்று வைத்து விட்டு, அனைத்தையுமே ராங்காக பண்ணியிருக்கிறார். குறிப்பாக, திரைக்கதை மோசமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நடிகர்களிடமிருந்து காட்சிகளுக்கு தேவையான நடிப்பினை பெற முடியாமல் தவித்திருக்கிறார். போலீஸ் ஸ்டேஷன் முழுவதும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருப்பவர்கள் எந்த விதமான பதட்டத்தையோ, உயிர் பயத்தையோ வெளிப்படுத்தாமல் இருப்பது, வேடிக்கை. அதிலும், ‘பெட்டி கேஸ் திருடன்’ தங்கதுரையின் கதாபாத்திரம் வடிவமைப்பு கொடுமை. ரசிகர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறார், அருண் பாண்டியன். அவரது டைலாக் மாடுலேஷன் எதற்காக?! தெரியவில்லை!

ஆதித்யா ஷிவக்குமார், யுவினா பார்த்வி இருவரும் ஒரு சில காட்சிகளிலே நடித்திருக்கிறார்கள். ஓகே…. தான்!

டெக்னிக்கல் சைடும் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை. ஒரு பார் பாடல் வருகிறது. அதில், இசைக்கேற்ற நடனமோ, நடத்திற்கேற்ற இசையோ இல்லை. இது போல் படத்தில் நல்ல விஷயங்கள் தேடினாலும் கிடைக்கவில்லை.

‘ரைட்’  –  எல்லாமே ராங்க்!