‘ட்யூட்’ , ரஜினி ஸ்டைல்ல பட்டாசா ஒரு படம்! – இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்யூட்’. இதில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டு சென்சாருக்கு தயாராக இருக்கிறது.

‘ட்யூட்’ படத்தினை இயக்கியிருப்பவர் கீர்த்தீஸ்வரன். தனது 19 ஆம் வயதிலிருந்து இயக்குநர் சுதா கொங்கராவிடம், பல வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கும் இவர், சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தின் செகண்ட் யூனிட் டைரக்டராக, பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் கீர்த்தீஸ்வரன், ‘ட்யூட்’ படம் குறித்து கூறியிருப்பதாவது..,

‘’பிரம்மாண்ட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸில், நான் படம் இயக்கியிருக்கிறேன். என்பதை இன்னும் பிஅமிப்பாகத்தான் பார்க்கிறேன். ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக, மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் கதை சொல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஆங்கிலத்தில் தான் சொன்னேன். சிரித்தபடியே கதை கேட்டார்கள். உடனே கதை பிடித்துவிட்டது.

ரஜினி சாரை மனதில் வைத்து தான், ‘ட்யூட்’ படத்தின் கதையை எழுதினேன். அவர் 30 வயதில் இருந்தால் எப்படி இருப்பார் என்பதன் கற்பனை தான் இந்தப்படத்தின் கதை. அது, சும்மா ஜாலியா, பட்டாசா இருக்கும். அந்தக் கதாபாத்திரத்தில், பிரதீப் ரங்கநாதன் அப்படியே பொருந்திப்போயிருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் ரஜினி என்றால், மமிதா பைஜு ஶ்ரீதேவி. இவர்களது காம்பினேஷனே சூப்பரா இருக்கும். தாலி செண்டிமென்ட், 90ஸ் டச் இருக்கும் அதே சமயத்தில், Gen Z  டச்சும் கலந்திருக்கும். லவ் சப்ஜெக்ட் தான், ஆனா மாஸா இருக்கும். முழுக்க முழுக்க சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். மவுண்ட் ரோட்ல கேமிரா வைக்கனும்ம்னு ஆசை, அதை செஞ்சிருக்கேன். சென்னையிலேயே சூப்பர், சூப்பர் இடமெல்லம் இருக்கு. முழுக்க முழுக்க சென்னையிலேயே தான் படமாக்கியிருக்கிறோம். என்னுடைய முதல் படமே தீபாவளிக்கு வெளியாவது சந்தோஷமா இருக்கு.

பிரதீப், மமிதாவுடன் சரத்குமார், ரோகிணி, பரிதாபங்கள் புகழ் டேவிட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பிரதீப் படத்தில் இருக்கும் எல்லாமும் இதில் இருக்கும். சுருக்கமா சொல்லனும்னா, குடும்பத்தோட இளைஞர்கள் கொண்டாடும் ஒரு படமா ‘ட்யூட்’ இருக்கும்!