இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ‘தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில், தேவராஜுலு மார்கண்டேயன் தயாரித்துள்ள படம், ‘டீசல்’. இதில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருக்க, ஹீரோயினாக அதூல்யா ரவி நடித்திருக்கிறார். இவர்களுடன் வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேத்கர், சாகிர் உசேன், தங்கதுரை, கே.பி.ஒய். தீனா, அபூர்வா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எம்.எஸ். பிரபு, ரிச்சர்ட் எம். நாதன் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சான் லோகேஷ் படத்தொகுப்பினையும், திபு நினன் தாமஸ் இசையமைப்பினையும் செய்துள்ளனர். வெளியீட்டிற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, தீபாவளி வெளியீடாக வெளியாகவுள்ளது.
‘டீசல்’ படம் குறித்து இயக்குநர் சண்முகம் முத்துசாமி கூறியதாவது..,
டீசல் படத்தில், ஒரு முக்கியாமன பிரச்சனை குறித்து சொல்லியிருக்கிறோம். கச்சா எண்ணெய் (Crude Oil) திருட்டும், கேள்விக்குறியாக மாறும் மீனவர்களின் வாழ்வாதாரமும் தான், இப்படத்தின் கரு. இதற்காக நானும் எனது டீமும், பல ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் மூலம் திரைக்கதை உருவாகியிருக்கிறது. இது ஒரு சர்வதேச அளவிலான பிரச்சனை. இந்த விஷயங்களை சொல்ல, திரைக்கதைக்கு என்ன கமர்ஷியல் விஷயங்கள் தேவையோ அதை செய்திருக்கிறேன். ஹரிஷ் கல்யாண் – அதுல்யா ரவியின் காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாக இருக்கும்.
கடற்கரை ஓரமாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் கச்சா எண்ணெய்யை திருடப்படுவது, 2014 ஆண்டுகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு நவீன சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பிரச்சனை வேறு வடிவத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அது என்ன? என்பது தான், படத்தின் சஸ்பென்ஸ். அந்தப்பிரச்சனை, இப்போதும் நாம் தொடர்பு படுத்திக்கொள்ளும் விஷயமாக இருக்கும்.
மீனவ கடற்கரை கிராமங்கள் கபளீகரம் செய்து நிறுவப்பட்ட தொழிற்சாலைகள் வருகையால் பாரம்பரிய மீனவர்கள் வெளியேற்றமும், அந்த தொழிற்சாலைகளிலிருந்து கசியும் அமோனியா போன்ற வாயுக்களால், மீன் வளம் மொத்தமும் அழியும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதுவும் சொல்லப்பட்டுள்ளது. என்கிறார், இயக்குநர் சண்முகம் முத்துசாமி.
‘டீசல்’ படத்தில் ஹரிஷ் கல்யாண் மீனவராக நடித்திருக்கிறார். அவர் நடிக்கும், முதல் முழுமையான ஆக்ஷன் படம்.
இப்படத்தில் இடம்பெற்ற ‘பீர்’ பாடலை, யூடியுபில் இதுவரை 70 மில்லியன்கள் பார்க்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.
வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, தீபாவளி வெளியீடாக வெளியாகவுள்ளது.