2018- கன்சோனன்ஸ் இசை மற்றும் நடன விழாவிற்கு தேர்வாகிய ஏ.ஆர்.ரகுமான் படம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள  ‘ஒன் ஹார்ட்’ என்கிற இசை திரைப்படம், 2018 வருடத்திற்கான கன்சோனன்ஸ் இசை மற்றும் நடன விழாவிற்கு தேர்வாகியுள்ளது. திரைப்படம், இசை மற்றும் நடனத்திற்கான முதல் சர்வதேச திரைப்பட விழா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது..

உலகெங்கிலும் இருந்து கலந்துகொண்ட படங்களில் 22 படங்கள் திரையிடலுக்கு தேர்வாகியுள்ளன. அதில் இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே படம் ‘ஒன் ஹார்ட்’ மட்டுமே .

இந்தவிழாவில் ஜூரி விருது, ரசிகர்கள் விருது, பார்வையாளர்கள் விருது என மூன்று வகை விருதுகள் வழங்கப்படுகின்றன.