சினிமா பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்ட ‘பயம் உன்னை விடாது!’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை, சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்ற, சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் 70 தாவது ஆண்டு தீபாவளி நிகழ்ச்சி, நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர்  சரவண சுப்பையா, நடிகர் செளந்தரராஜா , நடிகர் தங்கதுரை , நடிகர் ‘டீசல்’ மோரி,  மூத்த பத்திரிகையாளர்கள் கலைமாமணி ‘மக்கள் குரல்’ ராம்ஜி, மணவை பொன்.மாணிக்கம், ‘டெக்கன் குரோனிக்கல்’ அனுபமா சுப்ரமணியம் ,  மூத்த பத்திரிகை புகைப்படக் கலைஞர் ‘தேர்ட் ஐ’ பிரகாஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் முன்னதாக, ‘பயம் உன்னை விடாது…!’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படம், எஸ். கே. என்டேர்டைன்மெண்ட், ஐ ரோஸ் என்டேர்டைன்மெண்ட், மற்றும் ராதா திரை கோணம்  தயாரிப்பில், கி. மு. இளஞ்செழியன் இயக்கத்தில் கதிரவன், நந்தினி கிருஷ்ணன், கே. எஸ். ஐஸ்வர்யா, பேபி இ.ஜெ. மதிவதனி, விஜய் கண்ணன், கணபதி கருணாநிதி, அருண் பிரசாத், மணிகண்டராஜன், கதிர்காமன், சித்ரா, இளஞ்செழியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப் படத்திற்கான இசையை தயா. ரத்தினம் அமைத்துள்ளார், ஒளிப்பதிவு முரளி தங்க வேலு , படத்தொகுப்பு ஈஸ்வரமூர்த்தி குமார், கலை அன்புசித்ரன் ஆகியோர் மேற்கொள்ள, விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  நடிகரும் இயக்குநருமான ‘சிட்டிசன்’ சரவண சுப்பையா பேசுகையில்,

“தற்போது ,சினிமா விமர்சகர்களாக பலரும் களம் இறங்கியுள்ளனர் அவர்கள் இங்கிருக்கும் இந்த சங்கத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள் போல் நாசுக்காக ., அந்த படம் சம்பந்தப்பட்டவரோ , செய்தி சம்பந்தப்பட்டவரோ …. படித்தாலும் , கேட்டாலும் அவரது மனசு வலிக்காதபடி விமர்சனம் செய்ய பழக வேண்டும். அந்த மாதிரி விமர்சனம் எழுதும் அல்லது பேசும் பண்பை இங்கிருக்கும் பத்திரிகையாளர்களும் .,  சப்ஸ்கிரைப்பர்ஸுக்காக , லைக்குகளுக்காக .. புதிதாக விமர்சனம் செய்பவர்களைப் பார்த்து கைவிட்டு விடக்கூடாது… தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினர்கள் பேசிய பின்னர், சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுகளும், உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

விழாவிற்கு வந்த விருந்தினர்களை, ‘சினிமா பத்திரிகையாளர்  சங்க’ முக்கிய நிர்வாகிகளான தலைவர், D.R. பாலேஸ்வர். செயலாளர் , ஆர்.எஸ்.கார்த்திக்.  பொருளாளர், ஏ.மரிய சேவியர். கெளரவத் தலைவர் ‘கலைமாமணி’ நெல்லை சுந்தர்ராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

விழா நிகழ்ச்சியை, சங்க உறுப்பினர் ‘மைசிக்ஸர்’ விஜய் ஆனந்த் தொகுத்து வழங்கினார்.