ஆந்திர அரசியலில் நன்கு அறியப்பட்டவர், தோழர் கும்மாடி நர்சய்யா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) புதிய ஜனநாயகத்தின் ஒரு அரசியல்வாதி. இவர், தெலுங்கானாவின் ‘யெல்லாண்டு’ தொகுதியில் இருந்து. ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, ‘கும்மாடி நர்சய்யா வாழ்க்கை வரலாறு’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.
கும்மாடி நர்சய்யா திரைப்படத்தில், கன்னட நடிகர் தோழர் கும்மாடி நர்சய்யா கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறார். அறிமுக இயக்குநர், பரமேஷ்வர் ஹிவ்ராலே இயக்குகிறார். தயாரிப்பாளர் N.சுரேஷ் ரெட்டி (NSR), ‘பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இது அவரது முதல் தயாரிப்பாகும்.
கும்மாடி நர்சய்யா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், சிவராஜ்குமார் எளிமையான, வலிமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சதீஷ் முத்யலா, இசையமைப்பாளர் சுரேஷ் பாபிலி, எடிட்டிங் சத்யா கிதுதுரி ஆகியோர் தொழில்நுட்பக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.