ஜி.டி. நாயுடுவாக நடிக்கும் மாதவன்!

‘டிரைகலர் பிலிம்ஸ்’, ‘வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ்’ இணைந்து ஜி.டி. நாயுடுவின் அதாவது, கோபால்சாமி. துரைசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றினை, ‘ஜிடிஎன்’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கிறது. இதில், கோபால்சாமி. துரைசாமி நாயுடுவாக, ‘ராக்கெட்ரி’ திரைப்படத்தில், இந்திய விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன், கதாபாத்திரத்தில் நடித்த மாதவன், கோபால்சாமி துரைசாமி நாயுடுவாக நடிக்கிறார்.

கோபால்சாமி துரைசாமி நாயுடு, எந்திரவியல் மற்றும் விவசாயத்துறையில் பல கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்தார். இவரது விதைகளில்லா விவசாயம் மற்றும் பிளேடு கண்டுபிடிப்புகள் அமெரிக்கா, ஜெர்மனி நாடுகளை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. அவர், வரி ஏய்ப்பு செய்ததாகவும் ஒரு சர்ச்சை இருந்து வருகிறது.

ஜிடிஎன் திரைப்படத்தில், இரட்டை வேடங்களில் நடிக்கும் மாதவனுடன், நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா மற்றும் வினய் ராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி, இயக்கி வருகிறார். கோயம்புத்தூர் சுற்று வட்டார பகுதிகளில், இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 2026 கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘ஜிடிஎன்’  திரைப்படத்தை, ‘வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில், வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலனும், ‘டிரைகலர் பிலிம்ஸ்’ சார்பில்,  ஆர். மாதவன் மற்றும் சரிதா மாதவன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.