ரஜினி – கமல் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படமான இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் மூலம் ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி – ரஜினி காம்போ இணைகிறது. இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், “காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசஷல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173 படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.ரஜினி – கமல் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த் மட்டுமே நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தில் நடிப்பாரா? இல்லையா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.