சிவாஜி கணேசனின் பேரன், தர்ஷன் கணேசன் நடிக்கும்  ‘லெனின் பாண்டியன்’!

சத்ய ஜோதி பிலிம்ஸ் . டி. ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் திரு. சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம், ‘லெனின் பாண்டியன்’ (Lenin Pandiyan). இத்திரைப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கி வருகிறார்.

‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் தர்ஷன் கணேசனுடன், கங்கை அமரன், நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா, ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, மற்றும் சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இசை, சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு, ஏ. எம். எட்வின் சக்காய். படத்தொகுப்பு, நாகூரான் ராமச்சந்திரன். கலை இயக்கம், ஆத்தூரி ஜேகுமார். சண்டைப்பயிற்சி,  தளபதி தினேஷ். நடனம், விஜயா மாஸ்டர்.

‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், தயாரிப்பாளரும், தொழிலதிபருமான ராம்குமார் கணேசனின் மகனுமான தர்ஷன் கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  அவரோடு சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின்  தயாரிப்பாளர்கள் டி. ஜி. தியாகராஜன், திரு. அர்ஜுன் தியாகராஜன்,  ராம் குமார் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.